Friday 25 April 2014

தஞ்சை பெரிய கோயிலில் யாதவர் பற்றிய கல்வெட்டுகள்...



தஞ்சை பெரிய கோயிலில் யாதவர் பற்றிய கல்வெட்டுகள்...
தமிழகத்தின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தி நிறுத்தும் கலைச்
சின்னங்களில் சிறப்பிடம் பெறுவது தஞ்சை பெரிய கோயிலாகும்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க பெரிய கோயிலில் யாதவர்கள பற்றி உள்ள
கல்வெட்டுகள் சிலவற்றை காண்போம்.
இடையன் நள்ளாறன் எழுந்தருள்வித்த திருவுரு
அருண்மொழி தேவவளநாட்டு மங்கல நட்டு மங்கலத்தை சேர்ந்த இடையன்
நள்ளாறன் என்பவன் வில்லானைக்குக் குருக்களாக ஒரு பிரதிமம்
எழுந்தருல்வித்தான் என்று இராஜராஜன் கல்வெட்டு கூறுகிறது. மனிதர்க்கு
எடுப்பிக்கும் செப்பு விக்கரகங்களே பிரதிமம் எனப்பெறும்.
முதல் இராஜராஜன் தஞ்சை பெரிய கோயிலில் திருவிளக்கு எரிப்பிக்கப் பல
ஆயிரக்கணக்கான ஆடு,பசு,எருமைகளைத் தந்துள்ளான். இவை பன்னூறு இடையரிடம்
ஒரு விளக்குக்கு நான்தொரும் ஒரு உலக்கு நெய் அளக்க வேண்டும் என்று
நிர்ணயிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டன.நான்கு கல்வெட்டுகள்
திருவிளக்கு கொடைகளை கூறுகின்றன. இடையர் பற்றிக் கூறும் பகுதி
அக்காலத் தஞ்சையில் இருந்த தெருக்களை குறிக்கின்றது.
இச்சாசனங்களினால் தஞ்சைப் பெரிய கோயிற்குச் சுமார் 4000 ஆடுகளும்,4000
பசுக்களும்,100 எருமைகளும் திவிலக்கு எரிப்பதர்காகத்
தரப்பட்டிருந்தமை தெரிய வருகிறது.
பெரிய கோயில் வடக்குத் திருச்சுற்றுச் சுவரின் வெளிப்புறத்தில் உள்ள
கல்வெட்டுகள் 21,22,23,24 ல் முழுவதுமாக கோவிலுக்கு திருவிளக்குகள்
எரிப்பதற்காக நன்கொடைகள் நந்த செய்தியைக் கூறுவதாகும். மேற்படி
கல்வெட்டுகளினால் ஒவ்வொரு இடையருடைய பெயரும்,ஊரும் மற்றும்
அவர்களுடைய ஊர்,தெரு போன்றவைகள் பொறிக்கப்பட்டுள்ளன.
மேலும் இராஜராஜன் கொடுத்த கால்நடைகள் இடையரிடம் ஒப்படைக்கப்பட்டுத்
திருவிளக்குக்குத் தினந்தோறும் நெய் பெறப்பட்ட விவரங்கள்,பெற்ற
கால்நடைகளுக்கு இன்னின்னார் பொறுப்பேற்க வேண்டும் என்றும் உள்ளன.இந்த
கல்வெட்டுகளில் யாதவர்களை பற்றி கூறியதால் தஞ்சை நகரமைப்புப் பற்றிய
பல உண்மைகள் தெரிய வந்துள்ளன.இவ்வாறு தஞ்சை பெரிய கோயில்
கல்வெட்டுகளில் யாதவர்களை பற்றி 1000 ஆண்டுகளுக்கு முன்பே
கூறியுள்ளதால்,தஞ்சை நகரில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
யாதவர்கள் மிகுதியாக வாழ்ந்ததை அறிய முடிகிறது.
நன்றி! சிவபாத சேகரனின் தஞ்சைக் கல்வெட்டுக்கள் நூல்.