Saturday 30 November 2013

குறுவழுதி


குறுவழுதி கி.பி. 150 முதல் 160 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான்.பெரும் பெயர் வழுதியின் இளவல் ஆகலாம்.
இவரது பெயர் குறுவழுதியார் என்றும் [3] என்றும், அண்டர் மகன் குறுவழுதியார் [4] என்றும், அண்டர் மகன் குறுவழுதி [5] [6] என்றும், பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப் பெயர்களில் ‘ஆர்’ விகுதி இல்லாத பெயர்கள் இவரை பாண்டிய அரசர் எனக் கொள்ளத் தூண்டுகின்றன.
பருவம் அடைந்த பெண்ணிடம் தோன்றும் அடையாளங்கள் இவை என இவர் கூறும் அடையாளங்கள் மனத்தில் கொள்ளத்தக்கவை.
பொருளடக்கம் :
  • 1 பெயர் விளக்கம்
  • 2 குறுவழுதி ஒரு புலவர்
    • 2.1 பாடல் தரும் செய்திகள்
      • 2.1.1 பழந்தமிழ்
  • 3 அடிக்குறிப்பு

பெயர் விளக்கம் :

அண்டர் என்னும் சொல் குதிரைமீது ஏறி ஆனிரை மேய்த்த இடையரைக் குறிக்கும். இவர் இடையரின் பெருங்குடி மகனாய் விளங்கியவர் என்பது இவரது பெயரால் தெரியவருகிறது. இதில் வரும் ‘மகன்’ என்னும் சொல் முறைப்பெயர் அன்று. ஆண்மகன், பெருமகன், திருமகன் போன்ற சொற்களில் பின்னொட்டாக அமைந்துள்ள மகன் என்னும் சொல்லைப் போன்றது. வழுதி என்னும் சொல் பாண்டிய அரசர்களின் பெயர்களில் ஒன்று.

குறுவழுதி ஒரு புலவர் :

  • மதிப்பு மிக்க பெருமக்களாக விளங்கிய புலவர்கள்  பெயர்களில் ‘ஆர்’ விகுயைச் சேர்ப்பது சங்க கால மரபு. இந்தப் புலவர் பெயர் குறுவழுதி என ஆர் விகுதி இல்லாமலும், ஆர் விகுதி சேர்த்தும் குறிக்கப்பட்டுள்ளது.
  • நாடாண்ட பாண்டிய அரசர்கள்
  • இவர் பெயரில் வரும் அண்டர் என்பது இவரை ஆயர் அரசனாகவே குறிக்கிறதே அன்றி பாண்டிய அரசனாக குறிக்கவில்லை என்றும் இவர் பாண்டியர் கீழ் ஒரு சிற்றரசை ஆண்டதால் வழுதி என்று குறிக்கப்பட்டதாகவும் சில ஆய்வாளர் கருதுகின்றனர்.

பாடல் தரும் செய்திகள் :

அகநானூறு 150 நெய்தல்
தலைவியின் பருவ மாற்ற அழகைக் கண்டு தாய் தலைமகளை வீட்டுக்குள்ளேயே காப்பாற்றுகிறாள். தலைவனோ மணந்துகொள்ளாமல் விலகி நிற்கிறான். தலைவி தன்னைத் தலைவன் தழுவிய இடத்தைக் காணும்போதெல்லாம் அவர் வரமாட்டாரா என்று எண்ணி ஏங்குகிறாள். – தோழி தலைவனிடம் இப்படிச் சொல்லித் திருமணம் செய்துகொள்ளத் தூண்டுகிறாள்.
தாய் கண்ட பருவ மாற்றம் – பின்னிவிட வேண்டிய அளவில் கூந்தல் நெருக்கமாக உள்ளது. உடலில் பொன்னிறத் தேமல் காணப்படுகிறது. முலை வம்பு என்னும் துணிக் கட்டில் பிதுங்குகிறது.
தோழி கண்ட மாற்றம் – தலைவியின் கண்கள் நீர்த்துறையில் பூத்த நெய்தல் போலவும், நனைந்துகொண்டு பூக்கும் செருந்திப் பூ போலவும், காலையில் கள் துளிக்கும் காவி மலர் போலவும் உள்ளன.
அகநானூறு 228 குறிஞ்சி
அருவி தேன் கூடுகளில் மோதிக்கொண்டு பாறையில் விழும் சுனையில் பகல் முழுவதும் தலைவன் தலைவியோடு சேர்ந்து நீராடிவிட்டு இரவில் செல்வதும் நல்லதுதான். அல்லது இரவில் பகல் போன்ற நிலவில் வரினும் வரலாம். தலைவியின் சிறுகுடி சூரல்முள் வேலியைக் கொண்டது. அங்கே உயர்ந்த பாறையோரத்தில் பூத்திருக்கும் வேங்கை மரம் புலியும் யானையும் போல மருட்டும். – என்கிறாள் தோழி.
குறுந்தொகை 345 நெய்தல்
பகலில் வருவானைத் தோழி இரவில் வா என்கிறாள். கொடி உயர்த்தி மாலையணிந்த தேரை மணல் மேட்டில் ஏற்றிக்கொண்டு வருகிறாய். அது வேண்டாம். இரவில் கடற்கழி ஓரத்தில் தாழைமர ஓரத்தில் அமைதியான இடம் தலைவியின் இருப்பிடம். அங்கு அவள் தழையாடை அணிந்துகொண்டு உனக்காக ஏங்கிக்கொண்டிருப்பாள் – என்கிளாள்.
புறநானூறு 346 காஞ்சி, மகட்பாற் காஞ்சி
பெருங்குடி மகள் ஒருத்தியின் அழகு திருமணம் இல்லாமல் வீணாவதாக இந்தப் பாடல் தெரிவிக்கிறது.
இந்தப் பாடலில் முதலடி சிதைந்துள்ளது. எனினும் அதில் உள்ள பகுதிகள் அவள் மாற்றாந் தாயின் பாலை அருந்தி வளர்ந்தாள் என்பதைப் புலப்படுத்துகின்றன. ஈன்ற தாய் இவளுக்கு வேண்டாதவள் ஆகிவிட்டாளாம். பானவர்கள் போகட்டும் இருப்பவர்களாவது இவளுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லையாம். இந்த நிலையில் வல்லாண் சிறாஅன் ஒருவன் இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு இவளுக்குத் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருக்கிறானாம். இவளது அழகே இவளைப் பாழ் செய்துகொண்டிருக்கிறது – என்கிறது பாடல்.
தொந்தரவு செய்பவன் கல்வியில் பெரியவன் என்று தன்னைப் பீத்திக்கொண்டு திரிபவனாம். வேல் வீரனாம். நல்லவனாம்.
பழந்தமிழ் :
இவரது பாடல்களில் சில பழந்தமிழ்ச் சொற்கள் பொருள் உணரும் வகையில் எடுத்தாளப்பட்டுள்ளன.
  • ‘வல்லான் சிறாஅன்’ என இவர் கூறுவது பெருங்குடி மகனை.
  • ‘இழும் என் ஒலி’ அமைதியைக் குறிக்கும்.
  • பருவம் எய்திவிட்டாய் என்பதனை ‘எல்லினை’ என்னும் பழஞ்சொல்லால் இவர் குறிப்பிடுகிறார்

இடையன் நெடுங்கீரனார்

இடையன் நெடுங்கீரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவர் பாடியதாக ஒரே ஒரு பாடல் சங்கநூல் தொகுப்பில் உள்ளது, அது அகநானூறு 166ஆம் பாடலாக அமைந்துள்ளது. இவர் ஆடுமாடு மேய்க்கும் முல்லை நிலத்து மக்களில் ஒருவர் ஆதலால் இடையன் என்னும் அடைமொழி இவரது பெயருக்கு முன் அமைந்துள்ளது.

பாடல் தரும் செய்தி

பரத்தையொடு காவிரியாற்றில் அவன் நீராடினான். தலைப்புணை என்று சொல்லப்படும் முன்னோடிப் பரிசலில் சென்று நீராடினான். தன் வீட்டுக்கு வந்தவுடன் தன் மனைவியிடம் ஊரார் சொல்வது போல அப்படி நான் நீராடவே இல்லை என்று தெய்வத்தின்மீது சத்தியம் செய்கிறான். நான் சொல்வது பொய் ஆயின் வேளூர்வாயில் தெய்வம் என்னைப் பலியாகப் புடைத்து உண்ணட்டும் என்று கூறிச் சத்தியம் செய்கிறான். (சங்ககாலத்து வேளூர் வாயில் இக்காலத்தில் புள்ளிருக்கு வேளூர் என்னும் பெயருடன் விளங்குகிறது.)
இதனைக் கேள்வியுற்று அவனுடன் நீராடிய பரத்தை அவன் சொல்வது உண்மையாயின் தன்னுடன் நீராடியது யார் என்று கேட்டு அவனது நடிப்பை ஏளனம் செய்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

 

இடையன் சேந்தன் கொற்றனார்

இடையன் சேந்தன் கொற்றனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று அகநானூறு 375ஆம் பாடலாக (பாலைத் திணை) இடம் பெற்றுள்ளது. ஆடுமாடு மேய்க்கும் முல்லைநில மக்களை ஆயர் என்றும் இடையர் என்றும் கூறுவர். இந்தப் புலவர் முல்லை நிலத்தவர் என்பதை அவரது பெயரால் அறியலாம்.
கொற்றனார் என்பது புலவரின் பெயர். இவரது தந்தையின் பெயர் சேந்தன். சேந்தன் கொற்றனார் என்னும் தொடர் சேந்தன் மகன் கொற்றனார் என்னும் பொருளைத் தரும்.
இந்தச் சேந்தன் காவிரிக்கரை ஆர்க்காட்டை ஆண்ட அழிசி என்பவனின் மகன். புள்ளிப்பள்ளம் போட்ட வேலைக்கொண்டு இந்தச் சேந்தன் பகைவர் பலரை வென்றவன்.

பாடல் தரும் செய்தி

அவன் பிரிந்து சென்றான். அவள் உள்ளமும் உடலும் சோர்ந்து வேறுபட்டாள். தோழி தேற்றினாள். அவள் தேறுதல் பெறாமல் தோழியிடம் சொல்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
வழியில் செல்வோரின் கையில் எந்தப் பொருளும் இல்லை என்றாலும், கல்லா இளையர் தம் அம்பு தொடுக்கும் வில்லாண்மையை அறிந்துகொள்ளும் பொருட்டு அவர்கள்மீது அம்பை எய்து கொன்று எருவை என்னும் பெருங்கழுகளுக்கு உணவாக ஊட்டுவர். அந்த வழியில் அவர் செல்கிறாரே என்று கவலைப்படுகிறேன்.

வரலாறு

அவர் பாழிநகர்க் காட்டைத் தாண்டிச் சென்றிருக்கிறார். பாழி செம்பாலானது போன்ற கோட்டையை உடையது. ஒருமுறை அந்தக் கோட்டையைச் சோழ அரசன் இளம்பெருஞ்சென்னி அழித்தான். அதனால் அவ்வூர் அரசனும் வேற்று நாட்டவருக்கு உதவமாட்டான். எனவே அஞ்சுகிறேன் - என்கிறாள் அந்தத் தலைவி.

யாதவர்கள் எல்லாருமே அழிந்துவிட்டனரா? இதுதான் விவாதப்பொருள்.



 
வேறொரு ஆங்கில மடற்குழுவில் நடைபெறும் விவாதம் ஒன்று
கருத்தைக் கவர்ந்தது.
யாதவர் என்ற அரச வமசத்தினர் மதுராவிலும் பின்னர்
துவாரகையிலும் ஆண்டனர். மகாபாரதப்போர் முடிந்து தர்மர்
அசுவமேத யாகம் செய்தபின்னர் சில காலம் கழித்து, ஒரு
ரிஷியின் சாபத்தால் யாதவர்கள் ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டனர்.
அத்துடன் துவாரகையும் கடலுள் மூழ்கியது.
அத்துடன் யாதவர்கள் எல்லாருமே அழிந்துவிட்டனரா?
இதுதான் விவாதப்பொருள்.

Dynastic Drift என்றொரு சமாச்சாரம் உண்டு. ஓர் அரச பரம்பரை
காலப்போக்கில் ஒவ்வொரு இடமாக பெயர்ந்து, தாம் ஆரம்பித்த
இடத்திலிருந்து வெகுதூரம் வந்துவிடும்.
வாணர்கள், பல்லவர்கள், சகர்கள், குஷானர்கள், ஹூணர்கள்,
மாங்கோலியர்கள் போன்றோர் அவ்வாறு பல மைல்கள் கடந்து
சென்றவர்கள்.
பல்லவர்கள் வெளிநாட்டினர் என்று பல அறிஞர்கள்
கருதுகின்றனர். இரானியர்களாக இருக்கலாம் என்ற கருத்தே
வலுவாக இருக்கிறது.
அவர்கள் கிருஸ்துவ சகாப்த்தத்தின் ஆரம்பத்தில் மத்திய
இந்தியாவிலிருந்த சாதவாஹனர்களின் கீழ் அரசு அதிகாரிகளாக
விளங்கினர்.
சில நூற்றாண்டுகளில் அவர்கள் ஆந்திராவின் தென் பகுதிகளில்
இருந்தனர். பின்னர் தொண்டை மண்டலத்தின் வட பகுதி. அதன்
பின்னர் தொண்டை மண்டலம் முழுவதும். பின்னர் வட தமிழகத்தில் -
சோழநாடு உட்பட அவர்கள் ஆட்சி நிலவியது.
பல்லவர்களின் சில கிளை மரபினர் தென் கிழக்காசியாவிலும்
தங்கள் அரசை நிறுவினர்.
இதுபோலவே வாணர்களும் வெளிநாட்டு ஆட்கள்தாம். அவர்களும்
ஆங்காங்கு பெயர்ந்து பெயர்ந்து தமிழகம்வந்துசேர்ந்தனர். ஒரு
காலகட்டத்தில் பாண்டியர்களை மதுரையிலிருந்து விரட்டிவிட்டு
அவர்களே மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.

யாதவர்களின் கிளை மரபினரும் அதுபோலவே வேற்றிடங்களுக்குப்
பரவினர்.
இதுபற்றிப் புறநானூற்றுப் பாடலொன்றும்இருக்கின்றது.

'செம்பு புனைந்து இயற்றிய சேணெடும் புரிசை
உவராவீகைத் துவரையாண்ட
நாற்பத்தொன்பதின் வழிமுறை வந்த
வேளிருள் வேளே!'

இருக்குவேள் என்பவனைப் பற்றி கபிலர் பாடியது. அவர்
வாழ்ந்தது கி. பி. 2-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.
துவாரகையிலிருந்து வந்த பதினெண்மர் கொண்ட வேளிர்
கூட்டத்தின் நாற்பத்தொன்பதாவது தலைமுறையைச் சேர்ந்தவன்,
அந்த இருக்குவேள்.
அவர்கள் யது குலத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்களின் தொடர்பு கொண்டவர்கள் தாம் ஹொய்சாளர்,
சாளுக்கியர் முதலியவர்.
யௌதேயர் என்னும் அரச மரபும் இருந்திருக்கிறது.

Sunday 17 November 2013

தொண்டைமான்கள் யார்?

தொண்டைமான்கள் யார்?

தொண்டைமண்டலத்தை  24 கோட்டங்களாகப் பிரித்து குறும்ப இடையர் என்ற யாதவ  மரபினரே ஆண்டு வந்தார்கள் இவர்களே பல்லவர் எனப்பட்டனர். பிற்காலத்தில்  வலிமை குன்றி இராமநாதபுரத்துக்கு கட்டுப்பட்டு  புதுகோட்டையை ஆண்டு வந்தனர்

கி.பி. 1671-1710 முதல் இராமநாதபுரத்தை ஆண்ட கிழவன் சேதுபதி அதுசமயம்  புதுகோட்டை மன்னராக  இருந்த பல்லவராயன் என்பவரை நீக்கிவிட்டு, அதற்க்குப் பதில் தனது ஆசை நாயகியான கள்ளர் இனது நங்கை காத் ஆய் என்பவளின் சகோதரர் ரகுநாதன் என்பவனை புதுகோட்டை மன்னராக்கினார். இவரே தொண்டைமான் என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டார். எனவே ஆதியில் புதுகோட்டை தொண்டைமான்கள் யாதவர்கள் என்பது தெளிவாகிறது.

NOTE: 

In ancient times a nomadic shepard class abandoned it's wanderings and settled around kanchi and it's neighbourhood, destroyed the forests, converted them into fertile lands, made many adminstrative divisions or kottam's. from this sheppard class or kurumbas emerged great pallavas 

-Views of elliot sevol 

ஆராய்ச்சியாளராகிய எலியட் செவேல் முதலியோர் 'தொண்டைமண்டலத்துப் பழங்குடியினரான குறும்பர் மரபினரே பிற்காலப் பல்லவர்' என்றும் முடிவு செய்தனர். குறும்பர் ஆடுமாடுகளை மேய்ப்பவர். இதனைக் கருத்திற் கொண்டு. பால்-அவர் (பால் கறப்பவர் - குறும்பர்) என்பதே பல்லவர் எனத் திரிந்திருக்கலாம் என முடிவு செய்தவரும் சிலராவர்.

மணிமேகலையில் கூறப்படும் ஆதொண்டச்சக்கரவர்த்தி குறும்பரை வென்று அவர் தம் குறும்பர் பூமியைத் தனதாக்கி தன் பெயர் இட்டு தொண்டைமண்டலம் என வழங்கினான்' என்பது செவிவழி வரும் செய்தியாகும். இது முன்னரே கூறப்பட்டது

யாதவர்களுக்கு குறும்பொறை நாடன்  என்ற பட்டமும் உள்ளது. குறும்பு என்றால் காடு என்று பொருள். காடும் காடு சார்ந்த பகுதில் வாழ்ந்த முல்லை நில மக்களான குறும்ப இடையர் பிற்காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை வழியாக  ஆந்திரா கர்நாடக போன்ற பகுதிக்கு சென்று வாழ்ந்தனர்.

நன்றி
சுபாஷ் சேர்வை யாதவ்