Monday 30 September 2013

பதினெண் சித்தர்களில் ஐந்து சித்தர்கள் யாதவர்



பதினெண் சித்தர்களில் ஐந்து சித்தர்கள் யாதவ குலத்தினர் ஆவர்

1.இடைக்காட்டு சித்தர் இடையர் திருவண்ணாமலை

2. திருமூலர் இடையர் தில்லை(சிதம்பரம்)

 3.புண்ணாக்கீசர் இடையர் நாங்குனேரி

 4..கொங்கண சித்தர் இடையர் திருப்பதி

 5.குதம்பைச் சித்தர் இடையர் மாயூரம்

மேலும் ஒரு சிலர் குலம் தெரியவில்லை விஷ்ணு குலம் என்று ஒரு சில சித்தர் குறிப்பிடபடுவதால் அவர்களும் யாதவர்களாக இருக்க வாய்ப்பு  உள்ளது

Monday 9 September 2013

பாண்டியர்கள் யார்?



பாண்டியர்கள் யார்?

பாண்டிய நாட்டை ஆண்டவர்கள் பாண்டியர் எனப் பெயர் பெற்றனர். பாண்டியர் என்ன குலம் என்பது தெளிவாக இருக்கும் பொது அதை மறைத்து ஒவ்வொரு ஜாதியினரும் நாங்கள் தான் பாண்டிய மன்னரின் பரம்பரை என்று புத்தகங்களை எழுதி நூலகத்தை நிரப்பிவிட்டார்கள். அதன்படியே 2001ல் நெல்லையிலிருந்து சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நாடார்கள் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளிவந்துள்ளது. தன்னை பாண்டியன் பரம்பரை என்று சொல்வோர் இதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ஆனால் கோனார்கள் பாண்டியன் சகோதரியான யாதிரையை மணமுடித்து இப்பாண்டிய நாட்டை சீதனமாகக் கொடுத்ததாக இதிகாசம் கூறுகிறது. யாதிரையின் வம்சாவழியினரே பாண்டியர்கள். யாதிரையின்  கதைக்கு முன்பாகவே குமரி கண்டத்தைக் கடல்கோள் அழித்து விட்டது. அப்பொழுது ஒரு சில யாதவர்கள் வட இந்தியாவிற்கு சென்று குடியேறினார்கள். பின் ஆரிய படையெடுப்பின் காரணமாக மறுபடியும் இந்த யாதவர்கள் தெற்கே தள்ளப்படுகின்றனர் என்றும் இதிகாசம் சொல்கிறது. இவர்களின் ஒரு பிரிவினரே பாண்டியர்கள்

முல்லை நிலத்து ஆயர் பாண்டியர்களோடு பிறந்த குடியினர் எனக் கலித்தொகைக் கூறுகின்றது.

"மலிதிரை யூர்ந்து தன் மண்கடல்  வெளவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார் நாடிடம் படப்
புலியோடு வில் நீக்கிப்  புகழ்  பொறித்த கிளர்க்கெண்டை
வலியினான் வணங்கிய வாடா சீர்த்த தென்னவன்
தொல்லிசை தட்ட குடியொடு தோன்றிய நல்லினத்தாயார்".

ஆதாரம்: கலித்தொகை முல்லைக்கலி

கடல்கோளினால் தன்னுடைய நிலப்பகுதி அழிவிற்கும் அஞ்சாது  தம் பகைவர்களான சோழர்களையும் சேரர்களையும் முறியடித்து தனது "மீன்" கோடியை பொறித்த புகழையும், வலிமையையும், பகைவர்களை வணங்கச் செய்தவனும் ஆகிய அழியாதப் புகழுடைய பாண்டியனின் பழமையான புகழுடைய குடியின் வழியில் தோன்றிய நல்லினது ஆயர் இந்த ஆயர்கள் சிறந்த போர் வீரர்கள், அவர்களின் குடியும் பாண்டியன் குடியும் ஒரே குடியை அல்லது பரம்பரையைச் சேர்ந்தது. இப்பாண்டிய பேரரசின் வளர்ச்சிக்கும், பெருக்கத்திற்கும் இந்த ஆயர்களின் படையே காரணமாகும். மேலும் ஒரு வரலாற்று ஆசிரியரின் கூற்றையும் கவனிக்க வேண்டும். மங்கையன் அல்லது ஆதியதுனே என்ற யாதவனே பாண்டிய அரசனை உருவாக்கியவன் என வில்லியம் கோயிலோ என்பவர் கூறுகிறார்.

"The pandiyas built their pedigree much later,for an inscription of A.D. 1141 one of first of it's kind-traces their origin to mangayan or adiyadudevan of the yadava branch from whom sprang pandiyas".
                                                                                                                         
                                                                                        -Prof William Coehlo

மற்றோர் இலக்கியச் சான்று

ஒரு தமிழ் புலவர் கீழ்கண்ட சிலேடைப் பாட்டால் பாண்டியர்கள் யாதவர்கள் என்பதனை விளக்குகிறார்.

"கோலெடுத்து கோத்துரத்தும் கோப்பாண்டி மன்னன்வடி
 வேலெடுத்தும் கோத்துரத்தல் விட்டிலனே சால்மடுத்த
 பூபாலனானாலும் போமோ புராதனத்திற் கோபாலனான குணம்".

பாட்டு விளக்கம்:

பாண்டிய மன்னனே! வேலாயுதம் கொண்ட பாண்டியனே! உன் எதிரிகளைத் தாக்குவதற்காக அவர்களைத் துரத்திக்கொண்டு  வேலாயுதத்துடன் நீ பாய்ந்து செல்கிறாய். இதற்கு கரணம் உன் பரம்பரை புத்தி ஆதியிலே நீ ஆயனாக இருந்தவன். எனவே மன்னனான பிறகும் குட கோதுரத்தும் புத்தி உனக்குப் போகவில்லை.

கோ- என்றால் மன்னன், பசு என்ற இரு பொருள் உண்டு. இந்த இரண்டு பொருளிலும் இவர் பயன்படுத்துகிறார்.

மற்றோர் சரித்திர அதாரம் கூறுகின்றது

தமிழகத்தின் மீது சூறாவளி தாக்குதல்கள் நடத்தி வேங்கடம் முதல்  குமரி  வரை ஆக்கிரமித்து ஆட்சி புரிந்த களப்பிரர் என்பவர்களின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்ட பெருமை கடுங்கோன் பாண்டியருக்கு உண்டு.

4-ம் நூற்றாண்டு முதல் 6-ம் நூற்றாண்டு வரை தமிழகம் முழுவதும் தடுமாறச் செய்த இக்களப்பிரர் கன்னட நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது களப்பிரரது கொடுமைகளிலிருந்து தமிழகத்தை மீட்ட பெருமை  கடுங்கோன் பாண்டியருக்கு உரியது. அவர் 590-620ல் அரசாண்டார். அவர் காலம் பாண்டியர் புத்துயிர் பெற்றனர்.

"All historiyans are agreed on the point that roughly.between the IV and VI centuries the new race of kalabhras took hold of the south throwing all the erstwhile rulership of the region into darkness and disrepute, so that when the velkudi grant of the later day pandya refers to the defeat effected by kadun kone over this race usurpers"

                                                                                                -nilakanta sasthiri.

அனால் கோனார்கள் பாண்டிய மன்னர்களின் வழி வந்தவர்கள் என்று இதுவரையும் சொல்லி கொண்டதுமில்லை. இப்படி தற்பெருமை கொள்வது யாதவர்களின் வழக்கமில்லை இபொழுது அவர்கள் தங்கள் வரலாற்றை மறந்து கொண்டு இருப்பதால் சொல்லி தான் அக வேண்டும். பாண்டிய மன்னர்கள் யாதவ குலத்தவர் இது தான் உண்மை வரலாறு.


நன்றி,

சுபாஷ் சேர்வை யாதவ்.

சேர, சோழ, பாண்டியர்கள் யார்?

சேர, சோழ, பாண்டியர்கள் யார்?

பரமக்குடியில் சேர, சோழ, பாண்டியர்கள் தேவேந்திரர் குலமென்றும், விருதுநகரில் சேர சோழ பாண்டியர்கள் நாடார்கள் என்றும், மதுரையில் சேர, சோழ, பாண்டியர்கள் மறவர் என்றும், மாமல்லபுரத்தில் வன்னியர்கள் சோழர் குலமென்றும்.  மூவேந்தர்களின்   மீது எல்லோரும் உரிமை கொண்டாடி வருகின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் ஆயர் குலத்தினர் என்பது ஆயர்களுக்கே தெரியாது.

Friday 6 September 2013

புதுக்கோட்டை அரசர் பொப்பண்ணக் காங்கேயர் கோன்




புதுக்கோட்டை அரசர் பொப்பண்ணக் காங்கேயர் கோன்:

யாதவ மன்னர்கள் பலரின் வரலாறு மறைக்கப் பெற்றுள்ளது. அதே போன்று பலருடைய வரலாறு வெளிக்கொணராமலே உள்ளன. இவ்வாறு வெளிவராமல் இருந்த வரலாற்றில் ஒன்று தான் 2000 ஆண்டுகளுக்கு முன் புதுக்கோட்டையை ஆண்ட பொப்பண்ணக் காங்கேயர் கோன் ஆகும்.
பொப்பண்ணக் காங்கேயர் கோனின் கோட்டை, புதுகோட்டை அருகே கலசமங்கலம், சிங்கமங்கலம் ஆகிய இரு ஊர்களையும் இணைத்து புதுக்கோட்டை அரசர்களால் ஏறத்தாழ கிபி.1250 இல் இரண்டரை மைல் சுற்றளவுக்கு கட்டப்பட்டதே புதுக்கோட்டையும், கொத்தளங்களும். ஆனால் இன்று கோட்டையின் சுவடுகள் இல்லை. எனினும் பழைய கோட்டையின் சுவடுகளைப் புதுக்கோட்டை நகரத்துக் கிழக்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் ஏறத்தாழ 50 ஏக்கர் பரப்பளவில் அடி உயர மேடாகக் காணப்படுகிறது. பொப்பண்ணக்கோன் கோட்டைக்கு வெளியே கிழக்கிலும், மேற்கிலும் இரண்டு முனிஸ்வரன் கோவில்களும், தெற்கே அய்யனார் கோவிலும், வடக்கே காளி கோயிலும் உள்ளன. இந்த நான்கு கோயில்களும் அந்த கோட்டையின் காவல் தெய்வங்களாகும். சிலப்பதிகாரத்திற்கு ...உரை எழுதிய அடியார்க்கு நல்லார் தாம் உரை எழுத அடிப்படைக் காரணம்.

“கூற்றைத் தவிர்த்தருள் பொப்பண்ணக் காங்கேயர் கோன் அளித்த சோற்றுச் செருக்கு அல்லவோ தமிழ் மூன்றும் உரைவித்ததே”
 
என்று கூறுவதிலிருந்து அடியார்க்கு நல்லாரை ஆதரித்த வள்ளல் பொப்பண்ணக் கோன் எனத் தெரிய வருகிறது.

“தமிழகத்தில் சங்க கால மன்னர் கோட்டைகளும், நினைவுச் சின்னங்களும் பெருமளவில் அழியாமல் உள்ள ஒரே இடம் பொப்பண்ண கோட்டை எனலாம்”
 
என்று குடவாயில் பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார். எனவே யாதவ மன்னர்களின் வரலாற்றைப் பறைசாற்றும் பொருட்டுத் தற்போதாவது சமுதாய நலனில் அக்கறை உள்ள கல்லூரி பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டால் பல குறுநில மன்னர்களின் வரலாற்றை வெளிக்கொணரலாம்.          

நன்றி,
அடைக்கலம், தஞ்சை

மைசூரை ஆண்ட உடையார் என்னும் பட்டம் கொண்ட யாதவர்கள்

மைசூரை ஆண்ட உடையார் என்னும் பட்டம் கொண்ட யாதவர்கள்:

இந்த அரசை தோற்றுவித்த பெருமை யாதவ குல இரு சகோதரர்களையே சேரும் மூத்தவன் பெயர் யதுராஜா இளையவன் பெயர் கிருஷ்ணராஜா இவர்களின் தந்தையின் பெயர் ராஜதேவன் இவர்கள் கி.பி. 1399ம் ஆண்டு மைசூரை உருவாக...்கி இந்த வழிவந்த யாதவர்கள் உடையார் வாடியார் என்ற பட்டத்துடன் நமது நாடு சுதந்திரம் அடையும் வரை ஆட்சி செய்தனர். மைசூர் மகாராஜா பேலஸ் கட்டியதும் இந்த யாதவர்களே

தமிழகத்திலும் உடையார் என்ற பட்டத்துடன் யாதவர்கள் வாழ்கின்றனர். இவ்வமசதின் கடைசி மன்னன் ஜெயசாம்ராஜ் வடியார்.இவர் தமிழகத்தின் கவர்னராகவும் இருந்தார். அப்பொழுது மைசூர் என்பது எருமை நாடு என்று அழைக்கப்பட்டது. தமிழகம் கர்நாடக போன்ற எல்லை பிரிவுகள் அக்காலத்தில் இல்லை. மைசூர் என்ற எருமை நாடு அக்காலத்தில் தமிழகத்தில் இருந்தது.இதனை இருங்கோவேள் என்ற யாதவ மன்னன் ஆண்டான். சங்க கால மன்னன் முல்லைக்கு தேர் கொடுத்த பாரி தன் மகளிரை இருந்கோவேளுக்கு மணம் முடிக்க கபிலரிடம் கூறினான். ஏனென்றால் இருவரும் ஒரே இனம்.



கி.பி 1399 ஆம் ஆண்டிலிருந்து யது ராஜ வம்சத்தினர் விஜய நகர சாம்ராஜ்ய பிரதிநிதிகளாக மைசூரை ஆள ஆரம்பித்தனர். யாதவ வம்சத்தின் வழி வந்தவர்களாக கருதப்பட்ட யது ராஜ வம்சத்தினர் பின்னர் காலப்போக்கில் உடையார் ராஜ வம்சம் என்று அழைக்கப்பட்டனர். பெட்டடா சாமராஜ உடையார் மைசூர் கோட்டையை புதுப்பித்து அதை தன் தலைமையகமாக வைத்துக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் இவர் 1610 ஆம் ஆன்டு தன் அரசின் தலைநகரத்தை மைசூரிலிருந்து ஷீரங்கபட்டிணத்துக்கு மாற்றினார்.

1761ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டு வரை மைசூரை ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் ஆண்டனர். அதன் பின்னர் மைசூர் திரும்பவும் உடையார்களின் தலைநகரமாக மாறியது. 1895 ஆம் ஆண்டிலிருந்து 1940 வரை நான்காம் கிருஷ்ணராஜ வாடியார் தன் ஒப்பற்ற திட்டங்களின் மூலம் மைசூர் நகரத்தை அழகு மிகுந்த நகரமாக மாற்றினார். மைசூர் மாநகரம் அகலமான சாலைகளும், பூங்காங்களும், ஏரிகளும், கம்பீரமான மாளிகைகளும் கொண்ட அழகு நகரமாக இவர் காலத்தில் மாறியது.

ஆதாரம்: Medous Taylor Historical and Descripts Memorer

Thursday 5 September 2013

தேவன், தேவர் என்ற பிரிவிலுள்ள யாதவ மன்னர்கள்

தேவன், தேவர் என்ற பிரிவிலுள்ள யாதவ மன்னர்கள்:

மகாபாரத கிருஷ்ணனின் தந்தை பெயர், வாசுதேவன் அல்லது வசுதேவர் என்பதை எல்லோரும் அறிவர். அனால் வசுதேவருடைய சகோதரர்கள் , எதனை பேர் என்பதை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் எண்ணற்ற பேருக்கு இது தெரியாது என்பதால் அச்சகோதரர்களின் பெயரை இங்கே தருவது பொருத்தமாகும்.
1.வாசுதேவன் 2.பாலதேவன் 3.கண்டதேவன் 4.சூரியதேவன் 5.அக்கிதேவன் 6.வருணதேவன் 7.அஜ்ஜனா 8.பஜ்ஜனா 9.கட்ட பண்டிதா 10.அக்கூனா, 11.அன்ஜனா(பெண்) இதனை ஆராயும்போது மகாபாரத காலத்துக்கு முன்பே தேவன் தேவர் என்ற பெயரில் யாதவர்கள் அழைக்கபட்டார்கள் என்பது தெளிவு. தேவன் என்பது கடவுளை குறிக்கும் சொல் வடமொழியில் தேவ் என்றால், தமிழில், கோன் என பொருள்படும். கிரி என்றால் கோட்டை என்று தமிழில் அர்த்தம். எனவே தேவ் + கிரி = தேவகிரி என்றால் தமிழில் கோனார் கோட்டை என்பது பொருள். இப்பெயர் பெற்ற கோட்டை ஒன்று மராத்திய மாநிலம் ஒவ்ரங்கப்பாதிளுள்ளது. அதனை உருவாக்கியவர்களும் ஆட்சி செய்தவர்களும் யாதவர்களே.
தேவ் + ஸ்தானம் = தேவஸ்தானம் என்பது கோவிலைக்குறிக்கும் இது கன்னடமொழியில் தேவ் + கட் = தேவ்கட் என்றால் மராட்டிய மொழியில் கோட்டை என்று பொருள். இது தமிழில் கோனார் கோட்டை என்று பொருள் தரும். அதாவது தேவ் என்றால் கோன் கட் என்றால் கோட்டை இரண்டும் சேர்ந்தால் கோனார் கோட்டை என்று அறியலாம். இந்த தேவ்கட் கோட்டை மும்பை-கோவா சாலையில் சாவந்தவாடி என்ற ஊருக்கு அருகிலுள்ளது. தமிழகத்தில் கோனார் கோட்டை புதூர் என்ற ஒரு ஊர் கோவில்பட்டிக்கு அருகில் அழகு முத்து வாழ்ந்த கட்டலான்குளம் அருகேயும் உள்ளது. எனவே தேவ் தேவன் என்ற சொற்கள் யாதவர்களையும் குறிக்கும் என்பது தெளிவு.
இனி தேவன் தேவர் என்ற யாதவ குல வீரர்களில் ஒரு சிலரை மட்டும் இங்கே தருகிறேன்.கி.பி 1247ல் எழுச்சி பெற்ற தேவகிரி யாதவ வீரர்கள் சிங்கண்ணன், கிருஷ்ணமகாதேவன் ,ராமச்சந்திரதேவ், சங்கரதேவன், அரிபாலதேவர் ஆகியோர் ஆவர்.

யாதவ குல முதலாம் வல்லாளதேவன்:

இவர் வினாதித்தியனின் முதல் பேரர் எரியங்கனின் முதல் மகன். இவருக்கு இரண்டு சகோதரர். இளையவர் பிட்டிதேவன், கடைசி சகோதரர் யுதயாதித்தன் இவனது சிறப்பு பெயர், விஷ்ணுவர்தணன். இம்மூவரில் மூத்தவருக்கு வாரிசு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி. 1120ல் தமிழகத்தின் பெரும்பகுதியை இந்த யாதவர் ஆண்டனர். பாண்டியரை தோற்கடித்து மதுரையை கைப்பற்றி ஆட்சி செய்தனர் என்பது வரலாறு (கி.பி.1141ல் விஷ்ணுவர்தனர் காலமானார் ). இரண்டாம் வல்லாளதேவன் இவர் 47 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவர் நூளம்பவடியில் ஆட்சி புரிந்து வந்த பாண்டிய மன்னருடன் கி.பி.1116ல் போர் தொடுத்தார் இப்படி பல போர்களில் வெற்றி பெற்று வழி வழியாக இவர்கள் 1220 வரை ஆட்சி செய்தனர் இந்த யாதவ வம்சத்தின் கடைசி அரசர் மூன்றானம் வல்லாலத்தேவன் இவரது ஆட்சி காலம் கி.பி.1291-1342 இவர்கள் துவாரசமுத்திரம் , பேலூர் , சோமநாதபுரம் போன்ற இடங்களில் பல கோவில்களை கட்டியுள்ளனர். இக்கோவில்கள் இவ்வம்சத்தின் பொக்கிசங்களாகும்.

நன்றி,
s.p.s.சுபாஷ் சேர்வை யாதவ்

Wednesday 4 September 2013

அரசின் தோற்றம்

அரசின் தோற்றம்:

மாடு மேய்ப்பவன் மன்னன் ஆனான் ,ஆடு மேய்ப்பவன் அரசனானான் என்ற வரலாறு இந்திய மற்றும் உலகம் முழுவதும் உள்ளது இதனை நான் கூறவில்லை இந்திய வரலாறு கூறுகிறது அதனை அப்படியே கீழே தருகிறேன்.

புதிய கற்கால மக்கள் தமது கால்நடைச்செல்வத்தை பாதுகாக்க தமுள் வலிமை மிக்க ஒருவனைத் தலைவனாக ஏற்றுகொண்டனர்.அத்தலைவனே காலபோக்கில் அரசனாகவும் ஆனான்.கோ கோன் என்னும் தமிழ் சொற்கள் அரசனைக் குறிப்பவையாகும்.கோனார் என்னும் சொல் முல்லை நில மக்களான ஆயர்களை இன்றும் குறித்து வரும் சொல்லாக இருந்து வருதலை அறியலாம். கோ வாழ்ந்த இல்லம் கோவில் (கோ+இல்) எனப்பட்டது. இச்சொல்லே பின்பு மக்களுக்கு தலைவனாகிய கடவுள் உரைவதகக் கருதப்பட்ட இடத்திற்கும் பெயராயிற்று.
                                     
ஆதாரம்: தமிழ்வாணனின் தமிழக வரலாறு   பக்கம் 33

                                        THE LOWER CARNATACA COUNTRY

A shrine was built on the spot. origin of chenji(or chenji). A treasure was discovered by one ANANTAKON a shepard, who raised troops therewith, and getting aid from other cheifs, established himself as a raja, ginjee being his capital this was fusly year 600. he cut a canal for irrigation near trinomali which in the course of time having become filled up, was restored by the nabob WALLAJAH, F.1184. ANANTAKON gave to his tribe the name of sammanamanar. he was succeeded by CRISHNAKON, F.650. GONERIKON, F.680, both of them built sacred edifices. his son was GOVINDAKON, fusly 700. VALLIYAKON, fusly 720, he made roads,choultries &c. the dynasty now gave way before a curumbu tribe named vadaga yedaiyar (north country shepards) the first king of this tribe was KOBE-LINGAN, F.740. he built a brick fort at chentamangalam. he formed some tanks, and left others unfinished. in his time, his feudatories built several forts with bricks in different places, as asupur, pelacepur, cupam, cohir &c. he formed channels to bring down streams for irrigation from mountain springs; amomg which the one named kobalinganjuvi remains to this day. he ruled with great equity. afterwards, F.800, NARASINGA UDAIYAR became viceroy, the maharayer of anacondai, vijayanagaram, and pennacondai sent an army against the aforesaid kobalingan, and having conquered the country he delivered it to over to NARASINGA UDAIYAR to be held as a fief sending tribute to the rayer. A donation was made to a fane or temple, sal. sac. 1332 (.D. 1410). about this time the raja of vandiwash named BHUPATI RAYERUDAIYAR     ruled according to an inscription dated in sal. sac. 1341. VIRA VIJAYA RAYER was also ruler over that district. VALLALA RAYER ruled, F.750. he made additions to the shrine at trinomali. he paid tribute to the rayer. after he fell the country being diviided among petty chiefs became subject to CRISHNAPA NAYAKER, VIJAYA RAGHAVA NAYAKER, and VENKITAPA NAYAKER. in F> *&) VANYAP NAYAKAR came and collected tribute extensively. he encamped near vellore. the chief at chittorr, and other petty chiefs.

ஆதாரம்: The Mackenzie, Manugrapits, the rev. Willim Taylor 1838 Pg.25

இதில் கூறப்பட்டுள்ள அரசர்கள் அனைவரும் யாதவர்கள்
                                        
 நன்றி,
 s.p.s சுபாஷ்.