Friday 21 February 2014

பெரிய புராணத்தில் நாயனார்

 முன்னுரை
       தமிழில் தோன்றியுள்ள இலக்கியங்களுள், சைவசமய இலக்கியமாக, சமுதாய இலக்கியமாகப் பெருமை பெற்ற நூல் பெரிய புராணமாகும். தமிழகத்தில் வாழையடி வாழையாகப் போற்றி வளர்க்கப் பெற்று வந்தநெறி சைவநெறி. எல்லா உயிர்களையும் ஒன்றெனக் கருதி வந்த அன்புநெறி. இந்நெறியில் எல்லாச் சாதியினரையும் இறையன்பு என்ற குறிக்கோளில் இணைத்துப் பார்க்கிறார் சேக்கிழார். பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ள அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஐம்பத்தேழு பேர் பதினேழு சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார். அவர்களுள் ஆனாயநாயனார் என்பர் ஆயர் குலத்தைச் சேர்ந்தவராவார். அவரைப் பற்றியும் ஆயர்குல மக்களின் சிறப்புகள் தொழில், முல்லைநில சிறப்புகள் பற்றியும் பெரிய புராணம் காட்டும் கருத்துக்களை சிறிது ஆய்வதை இக்கட்டுரையின் நோக்கமாகும்
ஆயர் குலத்து நாயனார்

ஆ காத்து ஓம்பி ஆப்பயன் அளிக்கும்
கோவலர் வாழ்க்கை ஒரு கொடும்பாடு இல்லை
எனும் சிலப்பதிகார இணங்க ஆநிரைகளைத் காத்து அவற்றிடமிருந்துகிடைக்கக்கூடிய பால் நெய் முதலியவற்றைச் சமுகத்திற்கு அளித்து சேவை செய்யும் குலம் ஆயர் குலமாகும்.
இக்குல மக்கள் இடையர் என்றும் ஆநிரை காப்பதால் ஆயர்,கோவலர் என்றும்.இவர்களுடைய நிலம் முல்லை நிலம் என்றும்ஆடு மாடு மேய்த்து ஆயர் குலத்திற்கு திருமால் தலைவனானதால் திருமாலை இந்நிலத்திற்கு தெய்வமாக வணங்குவர்.      
                “வாயினின் மெய்யின் வழுத்து மனத்தின் வினைப் பாலிற்
      பேயுடனாடு பிரானடி அல்லது பேனாதார்”-பெரியபுராணம்-934
அவர் வாக்காலும் உண்மைபெறத் துதிக்கும் உள்ளத்தாலும் செயல் வகையாலும் பேயுடன் ஆடுகின்ற சிவபெருமான் திருவடிகளையே அல்லாமல் வேறொன்றையும் போற்றார்
குலத் தொழில் புரிந்த ஆனாயர்:
                   ஆயர்களின் குலத்தொழிலான மாடுகளை மேய்த்தலை ஆனாயர் செய்து வந்தார். பசுக்களை முல்லை நிலக்காட்டுக்கு ஒன்றாய்க் கொண்டு போய் காட்டில் உள்ள கொடிய விலங்குகளாலும்,பொருந்தும் நோய்களாலும் வரும் துன்பங்களிலிருந்து நீக்கிக் காத்து,எவ்விடத்தும் தூய்மையான நல்ல மென்மையான புல்லை மேய்ந்து விரும்பும் தூய நீரைக் குடித்துக் குற்றம் இல்லாதவாறும் பசுக்கூட்டங்கள் அளவில்லாமல் பெருகும்படி காத்தும் வந்தார் இதனை,
           “தூற்றுமென்புல் அருந்தி விரும்பிய தூநீருண்டு
           ஊனமில் ஆயம் உலப்பல பல்க அளித்துள்ளார்”                                                                                
                                                 -பெரியபுராணம்-935
எனும் சேக்கிழார் வாக்கால் அறியலாம். இதன்வழி ஆயர் குலத்தொழில் மாடு மேய்த்தல் என்பதையும் ஆயர்கள். ஆடுமாடுகளை மேய்ப்பதோடு அவற்றிடம் அன்பாகவும் இருக்கக் கூடியவர்கள் என்பதையும் பெரியபுராணம் உணர்த்துவதை அறியலாம். இங்ஙனம் “முல்லைநில மக்கள் மேய்ச்சல் நிலங்களைத் தேடித் தம் கால்நடைகளைப் பல இடங்களுக்கும் ஓட்டிச் சென்று வாழ்வது குறிஞ்சி நில மக்களின் மகிழ்வான வாழ்க்கைக்கு ஒப்பாகும் என்று பி.டி.சீனிவாச அய்யங்கார் கூறியுள்ளார். (History of the Tamils from the earliest time to 600 AD page No 175-176). இக்கருத்தின் வழி முல்லை நிலத்து ஆயர்குல மக்கள் தங்கள் தொழிலின் முலம் தாங்களும் மகிழ்ந்து ஆடு மாடுகளையும் மகிழ்வித்து பிற நில மக்களின் மகிழ்வான வாழ்க்கைக்கு உறுதுணையாகவும் இருந்துயுள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது                             


Sunday 16 February 2014

பாண்டியர்கள் யாதவர்கள்

ஒரு தமிழ் புலவர் கீழ்கண்ட சிலேடைப் பாட்டால் பாண்டியர்கள் யாதவர்கள் என்பதனை விளக்குகிறார்.


"கோலெடுத்து கோத்துரத்தும் கோப்பாண்டி மன்னன்வடி
வேலெடுத்தும் கோத்துரத்தல் விட்டிலனே சால்மடுத்த
பூபாலனானாலும் போமோ புராதனத்திற் கோபாலனான குணம்".

பாட்டு விளக்கம்:

பாண்டிய மன்னனே! வேலாயுதம் கொண்ட பாண்டியனே! உன் எதிரிகளைத் தாக்குவதற்காக அவர்களைத் துரத்திக்கொண்டு வேலாயுதத்துடன் நீ பாய்ந்து செல்கிறாய். இதற்கு கரணம் உன் பரம்பரை புத்தி ஆதியிலே நீ ஆயர் குலத்தில் பிறந்தவன். எனவே மன்னனான பிறகும் கூட கோதுரத்தும் புத்தி உனக்குப் போகவில்லை

கடுங்கோன் பாண்டியன்

தமிழகத்தின் மீது சூறாவளி தாக்குதல்கள் நடத்தி வேங்கடம் முதல் குமரி வரை ஆக்கிரமித்து ஆட்சி புரிந்த களப்பிரர் என்பவர்களின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்ட பெருமை கடுங்கோன் பாண்டியருக்கு உண்டு.


4-ம் நூற்றாண்டு முதல் 6-ம் நூற்றாண்டு வரை தமிழகம் முழுவதும் தடுமாறச் செய்த இக்களப்பிரர் கன்னட நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது களப்பிரரது கொடுமைகளிலிருந்து தமிழகத்தை மீட்ட பெருமை கடுங்கோன் பாண்டியருக்கு உரியது. அவர் 590-620ல் அரசாண்டார். அவர் காலம் பாண்டியர் புத்துயிர் பெற்றனர்.

"All historiyans are agreed on the point that roughly.between the IV and VI centuries the new race of kalabhras took hold of the south throwing all the erstwhile rulership of the region into darkness and disrepute, so that when the velkudi grant of the later day pandya refers to the defeat effected by kadun kone over this race usurpers"

பாண்டியர்


முல்லை நிலத்து ஆயர் பாண்டியர்களோடு பிறந்த குடியினர் எனக் கலித்தொகைக் கூறுகின்றது.

"மலிதிரை யூர்ந்து தன் மண்கடல் வெளவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார் நாடிடம் படப்
புலியோடு வில் நீக்கிப் புகழ் பொறித்த கிளர்க்கெண்டை
வலியினான் வணங்கிய வாடா சீர்த்த தென்னவன்
தொல்லிசை தட்ட குடியொடு தோன்றிய நல்லினத்தாயார்".

ஆதாரம்: கலித்தொகை முல்லைக்கலி

கடல்கோளினால் தன்னுடைய நிலப்பகுதி அழிவிற்கும் அஞ்சாது தம் பகைவர்களான சோழர்களையும் சேரர்களையும் முறியடித்து தனது "மீன்" கோடியை பொறித்த புகழையும், வலிமையையும், பகைவர்களை வணங்கச் செய்தவனும் ஆகிய அழியாதப் புகழுடைய பாண்டியனின் பழமையான புகழுடைய குடியின் வழியில் தோன்றிய நல்லினது ஆயர்
இந்த ஆயர்கள் சிறந்த போர் வீரர்கள், அவர்களின் குடியும் பாண்டியன் குடியும் ஒரே குடியை அல்லது பரம்பரையைச் சேர்ந்தது. இப்பாண்டிய பேரரசின் வளர்ச்சிக்கும்,பெருக்கத்திற்கும் இந்த ஆயர்களின் படையே காரணமாகும்.

முன்னோடி வீரன் அழகு முத்து கோன்



          புரட்சித்தலைவி தமிழக முதல்வர் தங்கத்தாரகை விருது பெற்ற உலகம் போற்றும் உத்தம முதல்வர் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு
நன்றி நன்றி நன்றி
" இந்திய விடுதலைப் போரில்
இடுபட்ட அனைவருக்கும்
முன்னோடி வீரன் அழகு முத்து கோன்"
மாண்புமிகு முதல்வர் பெருமிதம்
15/3/1996. அன்று நடைபெற்ற வீரன் அழகு முத்துக் கோன் திருவுருவச் சிலை திறப்பு விழா மற்றும் வீரன் அழகு முத்து கோன் போக்குவரத்துக் கழக தொடக்க, விழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர், டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஆற்றிய உரையீன் ஒரு பகுதி
தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த யாதவர் இன மக்கள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் வசித்து வருகிறார்கள்.
இந்திய சுதந்திர வரலாற்றில் ஆரம்ப கால கட்டத்திலேயே மற்ற வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் ஒரு முன்னோடியாக விளங்கிய தங்களது குலத்தோன்றல் வீரன் அழகு முத்து கோன் அவர்களின் புகழுக்கு சிறப்புச் சேர்க்கப் படவில்லையே என்ற ஆதங்கம் அவர்கள் மனதில் நீண்ட நாட்களாக இருந்து வந்ததை நான் அறிவேன்.
அந்த மக்களின் ஆதங்கமும் மனக்குறையும் இன்று நீங்கிவிட்டது என்று அறியும்போது உள்ளபடியே நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்
நன்றி,
சுபாஷ் சேர்வை யாதவ்

சங்கரன் கோவில் மாவீரன் குருசாமி யாதவ், பி.எஸ்.சி





சங்கரன் கோவில் ஒன்றியப் பெருந்தலைவராகத் திகழ்ந்தவர். அப்பகுதிப் பால்பண்ணைத்தலைவர். மற்றும் பல பொறுப்புகள் வகித்தவர். உதவி என்று வந்தவர்களுக்கு முகம் சுழிக்காமல் உதவி செய்தவர். சிறு வயதுலேயே சமுதாய உணர்வு கொண்டவர்.யாதவர் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர். யாதவர் கல்லூரியில் படிக்கும்போதே இனப்பற்றும் எழுச்சியும் கொண்டு மாணவர்களுக்குத் தளபதியாக மதிக்கப்பட்டவர். அவரது சிற்றூராம் ஆட்க்கொண்டார்குளத்தில் யாதவர்கள் மட்டுமே வாழ்கின்ற பகுதியாகும். அடுத்துள்ள வீராணம் சிற்றூரில் தங்களை ஆதிக்கவாதிகளாக எண்ணிக்கொண்ட ஒரு வர்க்கத்தினர், யாதவர்களை நீண்ட காலமாகத் தொழில் துறையில் ஈடுபடவிடாமல், அடகுத் தொழில், அரசு தொடர்பான ஒப்பந்தங்களில் அவர்களே இருந்து ஆட்சி செய்தமை கண்டு-குருசாமி யாதவ் அவர்கள் சினங்கொண்டு பொங்கி எழுந்தார். அண்ணன் குருசாமி யாதவ் அவர்களை போலவே தொழில் செய்யவும், அரசு ஒப்பந்தங்களை பெறவும் தொடங்கினார். அண்ணன் குருசாமி யாதவ் தொட்டது எல்லாம் பொன்னாக மாறிய காலம் அது. 1996 ஆம் ஆண்டு அண்ணன் குருசாமி யாதவ் சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளராக தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றார். எங்கு சென்றாலும் எதிலும் அண்ணன் குருசாமிக்கு தான் முதல் மரியாதை. கொடிகட்டிப் பறக்கின்ற நம்மிடம் போட்டி போடத் தொடங்கி விட்டானே என்று ஒரு சாரார்க்கு மிகுந்த பொறாமை அடர்ந்தது. தீர்த்துக் கட்டத் திட்டம் தீட்டினர்! காவல் துறை எச்சரித்தும் அந்த அரிமா அஞ்சாமல் வலம் வந்தது. முப்பது பேர் கொண்ட கூலிப்படைக்குப் பல லட்சம் கொடுத்துப் பல மாதங்களுக்குப் பின்னர் அவர்களால் 20-07-2000 அன்று படுகொலை செய்யப்பட்டார். அவ்வீரனுடைய உயிர்தோழன் திரு.மாரியப்பன் அவர்களும், அவர்களோடு இணைந்து போராடியவரும் இன்னுயிர் நீத்த அவலம் நமது இதயத்தைக் கசக்கிப் பிழிகின்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு தளபதி ‘தீனதயாளன்’, நெல்லை மாவட்டத்தில் ஒரு குருசாமி. இன்னவருடைய ஆள்வினைத் திறம் நம்மை வியந்து நெகிழச் செய்கின்றது. மக்கள் தமிழ் தேசக் கட்சி உருவாவதற்கு அடித்தளம் அமைத்தவர். மதுரையம்பதியில் மாவீரன் அழகுமுத்து விழாவினை அரசு எடுத்துச் சிறப்பித்த போது 70 ஊர்திகளில் ஏழாயிரம் பேரைத் திரட்டி வந்தமை கண்டு வியந்து மாண்புமிகு பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் அவர்கள் அன்னாரைப் பாராட்டி விருது வழங்கினார். புகழுடம்பு எய்திய சாதனைச் இருவரும் நமது நெஞ்சத்தில் என்றென்றும் நிலைத்து நின்று நமக்குச் சமுதாயத் தொண்டின் இன்றியமையாமையினை உணர்த்துவார்கள்.

லிட்டில் ஹரியானா



‘ஜெய் ஜவான்,ஜெய்கிஷான்’ என முழங்கினார் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம்.நாட்டின் பாதுகாப்போ நம் முப்படையின் வசம். இவ்விரண்டிலும் நம்மவர் முன்னிற்கின்றனர் என்பதற்கோர் எடுத்துக்காட்டுத்தான் ‘லிட்டில் ஹரியானா’ எனப்படும் பெருமாள் தேவன்பட்டி.

வடபுலத்திலுள்ள ஹரியானா ‘அஹிர்’ எனப்படும் யாதவர் நிறைந்த மாநிலமாகும்.பாரதப்போர் நிகழ்ந்த குருஷேத்திரம் இம்மாநிலத்தில்தான் உள்ளது. 1857ல் சுதந்திரப் போராட்ட வீரர் ‘ராவ் துலாராம்’ வாழ்ந்த மண்ணும் இது தான். அம்மாநிலத்தில் வீட்டிற்கு ஒருவராவது இராணுவத்தில் பணிபுரிவார்கள். போரில் சிறந்த சேவை செய்பவர்களுக்கும் வீர மரணம் அடைந்தவர்களுக்கும் அளிக்கப்படும் வீரப்பதக்கம் பெறும் யாதவர்கள் இம்மாநிலத்தில் தான் அதிகம்.எனவே தான் தமிழகத்தில் யாதவ வீரர்கள் மிகுதியாகவுள்ள பெருமாள் தேவன்பட்டியும் லிட்டில் ஹரியானா என அழைக்கப்படுகிறது. பெருமாள் தேவன்பட்டி எழில் மிகுந்து காட்சி தரும் ஊராகும்

தமிழ்நாட்டு இடையன்களின் கிளைகள்

1.கரிகாலன் இடையன்

2.புதுநாட்டு இடையன்
3.சிவத்த இடையன்
4.கருத்த இடையன்
5.கல்லுகட்டி இடையன்
6.சாம்பார் இடையன்
7.அப்பச்சி இடையன்
8.செம்பலங்குடி இடையன்
9.தெலுங்கு இடையன்
10.உள்நாட்டு இடையன்
11.அரசன் கிளை இடையன்
12.வருதாட்டு இடையன்
13.பெரிய இடையன்
14.ஆட்டு இடையன்
15.சீவ இடையன்
16.புதுக்கண் நாட்டார் நம்பியார்
17.கருத்தமணி இடையன்
18.பால் இடையன்
19.மோர் இடையன்
20.நம்பி இடையன்
21.பாசி இடையன்
22.சிவார் இடையன்
23.கொள்ளு இடையன்
24.வடுக இடையன்
25.மொட்ட இடையன்
26.தலைப்பா கட்டு இடையன்
27.நாட்டு இடையன்
28.நார்கட்டி இடையர்
29.பால்கட்டி
30.பஞ்சாரம் கட்டி
31.சிவியர்
32.சோழியாடு
33.இராமக்காரர்
34.பூச்சுக்காரர்
35.கொக்கிக்கட்டி

தமிழ்நாடு யாதவ குல பட்டங்கள்:

1.சேதிராயர்

2.சேர்வைக்கரர்
3.மணியக்காரர்மணியம் 
4.அம்பலக்காரன்அம்பலம் 
5.தேவ் 
6.தேவர் 
7.புழியர் 
8.மலையமான் 
9.மிலாடுடையார் 
10.மந்திரி 
11.யாதவராயர் 
12.மன்றாயர் 
13.பண்டாரம் 
14.பொதுவர் 
15.கரையாளர் 
16.போவண்டர் 
17.அண்டர் 
18.ஆய் 
19.தாஸ் 
20.பிள்ளை 
21.விருஷ்ணி 
22.உடையார் 
23.ராயர் 
24.கீதாரி 
25.வேள் 
26.வானரவீரர்
27.கோன் 
28.கோனார் 
29.கருநந்தன் 
30.இரயேந்திரன்
31.இடையர் 
32.தோதுவார் 
33.கோவலன் 
34.நம்பியார் 
35.கௌரா 
36.மேயர் 3
7.முனியன் 
38.எருமன் 
39.ஆயர் 
40.வடுக இடையர் 
41.நாயுடு 
42.கொல்லா 
43.நாயக்கர் 
44.கரம்பி 
45.முல்லையர் 
46.கோவிந்தர் 
47..ஆன்வல்லவர் 
48.குடவர் 
49.பாலர் 
50.அமுதர் 
51.தொறுவர் 
53.குறும்படை 
54.முக்கந்தன் 
55 மன்னாரிடையர் 
56. குறும்பர் 
57.குறும்ப இடையர் 
58.குறும்பொறை நாடன்

அழகுமுத்து கோன் வாரிசுக்கு வீரவணக்கம்



 வீரவணக்கம் ! வீரவணக்கம் ! வீரவணக்கம் ! அய்யா சிவத்தசாமி அவர்கள் அகால மரணம் அடைந்தார் என்பதை வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன். அய்யா ஆத்மா பூரண அமைதி பெற இறைநிலையிடம் பிரார்த்தனை செய்கிறேன் . அனைவரும் அழகுமுத்துக் கோன் வாரிசு அய்யா சிவத்தசாமி அவர்களை ஆத்மா பூரண அமைதி பெற பிரார்த்தனை செய்யுங்கள் . என் வீரவணக்கம் ! வீரவணக்கம் ! வீரவணக்கம் ! வீரவணக்கம் ! வீரவணக்கம் ! வீரவணக்கம் ! வீரவணக்கம் !

கிருஷ்ண ஜெயந்தி




கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு. தென்னகத்தில் `கோகுலாஷ்டமி' என்றும், வட இந்தியாவில் `ஜென்மாஷ்டமி' என்றும் இது அழைக்கப்படுகிறது. எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார்.

அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று,ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிறைக்குள் வசுதேவர்-தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார். பிறந்தபோது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் கிருஷ்ணன் காட்சியளித்தான்.

பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க சாதாரணக் குழந்தை வடிவானான். மூன்று வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும், 8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணனின் இளம் வயது கழிந்தது.

தனது ஏழாவது வயதில் கம்சனை வீழ்த்தி, பெற்றோரையும் விடுவித்தான் கிருஷ்ணன். அவதாரங்களுள் ஒருவரான `ஸ்ரீ கிருஷ்ண பகவானின் ஜென்மாஷ்டமி வரும் 1-ந்தேதி சிறப்பாக கொண்டாடப்படவிருக்கின்றது. அன்று மக்கள் இனிப்புகள், காரங்கள் செய்து குறிப்பாக சீடை வகைகள் பல செய்து கண்ணனுக்கு நிவேதனம் செய்து மகிழ்வர்.

அரிசி மாவினால் கண்ணனின் காலடிகளை இட்டு கோபாலனை தத்தம் இல்லங்களுக்குப் பெண்கள் அழைப்பர். அன்று பல கோவில்களில் "உறியடி'' திருவிழா நடைபெறும். மங்களகரமான இந்நாட்களில் ஜகத்தில் உள்ள பக்தர்களுக்கு (மக்கள் அனைவருக்கும்) நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கிருஷ்ண பரமாத்மா அருள நாம் அவரை "கீத கோவிந்தம்'', "ஸ்ரீமந் நாராயணீயம்'', "ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம்'' போன்ற பல ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்குவோம். "ஆயர்பாடி கண்ணனை ஆராதிப்போம்!

வழிபாட்டு முறை:

கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டில் மாலை 6 மணிக்கு கண்ணனின் படத்தை அலங்கரித்து நெய் விளக்கு ஏற்ற வேண்டும். குழந்தைகளை கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரிக்க வேண்டும்.

தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு போன்ற பூஜை பொருட்களுடன் கண்ணனுக்கு பிடித்தமான சீடை, முறுக்கு, தட்டை, லட்டு, அதிரசம், முந்திரி, பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ கலந்த கோதுமை பொங்கல், இனிப்பு பூரி, மோர் குழம்பு, ரவா லட்டு, தேன்குழல், சர்க்கரை கலந்த வெண்ணை, பாசிப் பருப்பு பாயாசம் போன்ற பிரசாதங்களை படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

"ஊரில் உள்ள அத்தனை குழந்தைகளையும் கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரித்து கோவிலுக்கு அழைத்து செல்வார்கள். ஆடல்-பாடல் கோலாட்ட நிகழ்ச்சிகள், குழந்தைகள் ஆடுவதை பார்க்கும் போது கண்ணன் ஒவ்வொரு கோபியர்களிடமும் ஆனந்த நடனம் ஆடிய தீராத விளையாட்டு பிள்ளையை நினைவுபடுத்தும். இவ்வேடமிட்ட குழந்தைகள் புத்திசாலியாக செயல்படுகிறார்கள்.

கண்ணனின் பரிபூரண அருள் இந்த குழந்தைகளுக்கு கிடைக்கிறது. பலன்கள்: கிருஷ்ண ஜெயந்தியில் கண்ணனை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகிழ்ச்சி தங்கும், அகந்தை அகலும், மூர்க்க குணம் குழந்தைக்கு ஏற்படாது. தர்மசீலராக இளைஞர்கள் வருவார்கள். அரசியல் ஞானம் உண்டாகும். நிர்வாக திறன் அதிகரிக்கும்.

மாமனார் வழியில் சொத்துக்கள் கிடைக்கும். திருமணத் தடைகள் அகலும், செல்வம் பெருகும்.வயல்களில் விளைச்சல் அதிகரிக்கும், ஆடு, மாடுகள் பல்கி பெருகும், கடன் தீரும், பகைமை ஒழியும், நண்பர்கள் கூட்டு தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். புகழ் கூடும். அமைதி நிலவும், ஆற்றல் பெரும், வறுமை இல்லா வாழ்வு அமையும்.

வழிபாடு செய்யும்போது கோவிந்தா என்று அழைத்து வழிபாடு செய்தால் அதிக பலன்களை பெறலாம். அதன் பொருள் பசுக்களின் தலைவன் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவன். பூமியை தாங்குபவர். வேண்டுவதால் அடையக் கூடியவன் என்பதாகும்.இதனால்தான் ஆதிசங்கரரும், பஜகோவிந்தம் பாடுங்கள் அது மரண பயத்தை போக்கும் மந்திரம் என்றார்.


கிருஷ்ண ஜெயந்தி வழி பாட்டை வீட்டில் குழந்தைகளுடன் கொண்டாடும் போது கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். ராஜதந்திரம் அதிகரிக்கும், அரசியல் சாணக்கியத் தன்மை அதிகரிக்கும். பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்திசாலித்தனம் கூடும். எளிமையாகவும், சுருக்கமாகவும், புரிந்து கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும்.

பெண்கள் அரசியலில் சிறந்து விளங்க இவ் வழிபாடு மிகவும் சிறந்த வழிபாடு என்கிறார் சென்னை அரும் பாக்கத்தைச் சேர்ந்த ஜோதிடர் சாமி நடராஜன்.

திருமண தடை நீங்கும்:

அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே இப்பாடலை பாடிய ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் மடியில் கண்ணன் அமர்ந்து பாடல்கள் கேட்பானாம். அதனால் அவர் தொடையை தட்டி தாளம் போடாமல் பாடுவாராம். அத்தகை சிறப்புமிக்க இந்த ஊத்துக்காட்டில் காலிங்க நர்த்தனனாக இருக்கும், கண்ணனை வழிபடுவதன் மூலம் பகையை வெல்லலாம்.

எதிரிகள் அஞ்சிடுவர், நாகதோஷம் நீங்கும், திருமண தடை நீங்கும்.இவ்வாலயம் கும்பகோணத்தில் இருந்து ஆவூர் வழியாக தஞ்சை செல்லும் சாலையில் ஊத்துக்காட்டில் உள்ளது. காம தேனு இறைவனின் அழகை கண்டுகளித்து இசையில் நனைந்த இடமான தேனு சுவாசபுரம் என்று அழைக்கப்பட்ட மூச்சுக்காடு எனும் ஊத்துக்காடு ஆகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இவ்வாலயம் சென்று வழிபட்டு வரமேன்மை காண்பார்கள்.

கண்ணன் பிறந்த மதுராவில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. யமுனை கரையோரம் கண்ணன் விளையாண்ட கேசியார்ட், கோவர் தனன் ராதை பிறந்த பட்சனா மகாபன் கோகுலம், நந்தி கிராமம் என்ற இடங்களில் மிகவும் பிரமாண்ட முறையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.நாமும் கிருஷ்ண ஜெயந்தி அன்று நம் வீடுகளில் கண்ணனை அழைத்து வழிபட்டு ஏராளமான பலன்களை பெற்றிடுவோம்.