Saturday 27 December 2014

யாதவர் கோனார் ஆயர் வேளிர் இடையர்

         யாதவர்(கோனார்,ஆயர், வேளிர், இடையர்) என்போர் தமிழ்நாட்டின் ஒரு முக்கிய சமுதாயம் ஆகும், யாதவர்கள் என்போர் தமிழ் நாட்டில் ஆயர், வேளிர், இடையர் மற்றும் கோனார் என்று அழைக்கபடுக்கிறார்கள், வடஇந்தியாவில் யாதவ் என்று அழைக்கப்படுவோருக்கும் தமிழகத்தின் யாதவர்களுக்கும் பேசும் மொழி மட்டுமே மாறுபடுகிறது , மற்றபடி கலாச்சார பண்பாட்டு ரீதியில் பெரும்பான்மையான செயல்பாடுகள் அனைத்தும் ஒத்துப் போவதை காண முடிகின்றது . தமிழகத்தில் தமிழே இவர்களது மொழி. இவர்கள் பால் மற்றும் பால் பண்ணை சார்ந்த வளர்ச்சியான தொழில்களைச் செய்கின்றனர்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இவர்கள் பரவி இருக்கிறார்கள். சிவகங்கை, புதுக்கோட்டை ,மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் அதிகமாக வசிக்கிறார்கள். தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் குறும்படை என்ற பெயரில் அதிகளவு இருப்பதாகக் கூறப்படுகிறது.

வழிபாடு
இவர்களில் அநேகர் வைணவ வழியைப் பின்பற்றுகின்றனர். மதுரை மீனாட்சி, இந்து கோனார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் மிக முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமன்றி, அன்றைய மன்னராட்சியின் ஆட்சிச் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப்படுகின்றன.

பெயர்காரணம்
`இடை' (நடு) என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து `இடையர்' என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. ஐவகை நிலங்களில் `முல்லை' என்ற நடுக்காட்டில் புல்வெளி நிலத்தில் அவர்கள் வாழ்ந்து வந்ததையே இது எடுத்துக்காட்டுகிறது.

விவசாயிகள், வியாபாரிகள் என்ற இரு பிரிவினர்களுக்கு இடையே நடுவே ஒரு தொடர் கண்ணியாக இடையர்கள் இருந்ததால் அவர்களுக்கு அப்பெயர் ஏற்பட்டது என்று பூஜ்யர் போப் தஞ்சாவூர் பற்றிய தகவல் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த இடையர்கள்தான் பிற்காலத்தில் தங்கள் பெயர்களுடன் கோனார் அல்லது கோன் (அரசன்) என்ற பட்டப்பெயரைச் சேர்த்துக் கொண்டுள்ளனர். 1891ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணிப்பு அறிக்கையில் `பிள்ளை, கரையாளர்' என்ற பட்டப் பெயர்களையும் இவர்கள் பயன்படுத்திக் கொண்டது பதிவாகியுள்ளது. இவர்கள் தம்மைப் பற்றிக் கூறும் பொதுப்படையான அம்சம், தாங்கள் கிருஷ்ணரின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே.

பாரம்பரியம்
இவர்களுக்கென நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் பல ரிஷிகள் யாதவர்களே என்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்த ஆயர்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்த ஆயர்கள்தான் யாதவர்கள் என்று சொல்லப்படுகிறது. தமிழ் நாட்டில் இருந்த சித்தர்கள் பதினெட்டுப் பேர் (பதினெண் சித்தர்கள்) என்று கூறுவர். அவர்களில் திருமூலர் மற்றும் இடைக்காட்டுச் சித்தர் ஆகியோர் ஆய் குலத்தை சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறார்கள். அரசியலிலும் இலக்கியத்திலும் இச்சமூகத்தினருக்கு அதிக ஈடுபாடு உண்டு.

No comments:

Post a Comment