Friday, 21 February 2014

பெரிய புராணத்தில் நாயனார்

 முன்னுரை
       தமிழில் தோன்றியுள்ள இலக்கியங்களுள், சைவசமய இலக்கியமாக, சமுதாய இலக்கியமாகப் பெருமை பெற்ற நூல் பெரிய புராணமாகும். தமிழகத்தில் வாழையடி வாழையாகப் போற்றி வளர்க்கப் பெற்று வந்தநெறி சைவநெறி. எல்லா உயிர்களையும் ஒன்றெனக் கருதி வந்த அன்புநெறி. இந்நெறியில் எல்லாச் சாதியினரையும் இறையன்பு என்ற குறிக்கோளில் இணைத்துப் பார்க்கிறார் சேக்கிழார். பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ள அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஐம்பத்தேழு பேர் பதினேழு சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார். அவர்களுள் ஆனாயநாயனார் என்பர் ஆயர் குலத்தைச் சேர்ந்தவராவார். அவரைப் பற்றியும் ஆயர்குல மக்களின் சிறப்புகள் தொழில், முல்லைநில சிறப்புகள் பற்றியும் பெரிய புராணம் காட்டும் கருத்துக்களை சிறிது ஆய்வதை இக்கட்டுரையின் நோக்கமாகும்
ஆயர் குலத்து நாயனார்

ஆ காத்து ஓம்பி ஆப்பயன் அளிக்கும்
கோவலர் வாழ்க்கை ஒரு கொடும்பாடு இல்லை
எனும் சிலப்பதிகார இணங்க ஆநிரைகளைத் காத்து அவற்றிடமிருந்துகிடைக்கக்கூடிய பால் நெய் முதலியவற்றைச் சமுகத்திற்கு அளித்து சேவை செய்யும் குலம் ஆயர் குலமாகும்.
இக்குல மக்கள் இடையர் என்றும் ஆநிரை காப்பதால் ஆயர்,கோவலர் என்றும்.இவர்களுடைய நிலம் முல்லை நிலம் என்றும்ஆடு மாடு மேய்த்து ஆயர் குலத்திற்கு திருமால் தலைவனானதால் திருமாலை இந்நிலத்திற்கு தெய்வமாக வணங்குவர்.      
                “வாயினின் மெய்யின் வழுத்து மனத்தின் வினைப் பாலிற்
      பேயுடனாடு பிரானடி அல்லது பேனாதார்”-பெரியபுராணம்-934
அவர் வாக்காலும் உண்மைபெறத் துதிக்கும் உள்ளத்தாலும் செயல் வகையாலும் பேயுடன் ஆடுகின்ற சிவபெருமான் திருவடிகளையே அல்லாமல் வேறொன்றையும் போற்றார்
குலத் தொழில் புரிந்த ஆனாயர்:
                   ஆயர்களின் குலத்தொழிலான மாடுகளை மேய்த்தலை ஆனாயர் செய்து வந்தார். பசுக்களை முல்லை நிலக்காட்டுக்கு ஒன்றாய்க் கொண்டு போய் காட்டில் உள்ள கொடிய விலங்குகளாலும்,பொருந்தும் நோய்களாலும் வரும் துன்பங்களிலிருந்து நீக்கிக் காத்து,எவ்விடத்தும் தூய்மையான நல்ல மென்மையான புல்லை மேய்ந்து விரும்பும் தூய நீரைக் குடித்துக் குற்றம் இல்லாதவாறும் பசுக்கூட்டங்கள் அளவில்லாமல் பெருகும்படி காத்தும் வந்தார் இதனை,
           “தூற்றுமென்புல் அருந்தி விரும்பிய தூநீருண்டு
           ஊனமில் ஆயம் உலப்பல பல்க அளித்துள்ளார்”                                                                                
                                                 -பெரியபுராணம்-935
எனும் சேக்கிழார் வாக்கால் அறியலாம். இதன்வழி ஆயர் குலத்தொழில் மாடு மேய்த்தல் என்பதையும் ஆயர்கள். ஆடுமாடுகளை மேய்ப்பதோடு அவற்றிடம் அன்பாகவும் இருக்கக் கூடியவர்கள் என்பதையும் பெரியபுராணம் உணர்த்துவதை அறியலாம். இங்ஙனம் “முல்லைநில மக்கள் மேய்ச்சல் நிலங்களைத் தேடித் தம் கால்நடைகளைப் பல இடங்களுக்கும் ஓட்டிச் சென்று வாழ்வது குறிஞ்சி நில மக்களின் மகிழ்வான வாழ்க்கைக்கு ஒப்பாகும் என்று பி.டி.சீனிவாச அய்யங்கார் கூறியுள்ளார். (History of the Tamils from the earliest time to 600 AD page No 175-176). இக்கருத்தின் வழி முல்லை நிலத்து ஆயர்குல மக்கள் தங்கள் தொழிலின் முலம் தாங்களும் மகிழ்ந்து ஆடு மாடுகளையும் மகிழ்வித்து பிற நில மக்களின் மகிழ்வான வாழ்க்கைக்கு உறுதுணையாகவும் இருந்துயுள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது                             


No comments:

Post a Comment